கொலை வழக்கு தலைப்பு... பிரச்னைக்கு காரணமான இயக்குநர் பேச்சு!
17 Monday Jul 2017

கொலை வழக்கு படத்திற்கு நீதிமன்றம் மூலமாக காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்தது. இயக்குநர், தயாரிப்பாளர் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. திரைத்துறையினர் என்றால் சற்று கரிசனத்துடன் நடந்துகொள்ளும் காவல்துறை இவர்கள் விஷயத்தில் இத்தனை கெடுபிடி காட்டக் காரணம் பிரஸ்மீட்டில் இயக்குநர் பேசியதுதான்.

பிரஸ்மீட்டில் இயக்குநர் பேசியபோது தமிழக காவல்துறையை கடுமையாக விமர்சித்தார். படமும் அப்படித்தான் இருக்கும் என்று ஓப்பனாக சொன்னார். இது எல்லாம் காவல்துறை மேலிடத்துக்கு சென்றதால்தான் இப்படி கடும் நடவடிக்கையாம். இப்போது படத்தின் டைட்டில், கதை எல்லாமே மாற்றப்பட்டுவிட்டது. இருந்தாலும் போலீசார் படத்தை விடுவார்களா? பார்க்கலாம்!

    Related News...