லண்டனில் இருந்து மும்பை வந்த காதலர்: ஸ்ருதிக்கு விரைவில் திருமணம்?
28 Friday Jul 2017

மும்பை: ஸ்ருதி ஹாஸனை பார்க்க அவரது காதலர் மைக்கேல் கார்சேல் லண்டனில் இருந்து மும்பை வந்துள்ளார். நடிகை ஸ்ருதி ஹாஸனும், லண்டனை சேர்ந்த நாடக நடிகர் மைக்கேல் கார்சேலும் காதலிப்பதாக கடந்த சில மாதங்களாக கிசுகிசுக்கப்படுகிறது. காதலர் தினத்தை ஸ்ருதியுடன் கொண்டாட மைக்கேல் மும்பை வந்திருந்தார். சங்கமித்ரா படத்தை விளம்பரப்படுத்த கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு சென்றபோது ஸ்ருதி மைக்கேலை சந்தித்தார்.

 

ஸ்ருதியுடன் நேரம் செலவிட மைக்கேல் மும்பைக்கு வந்துள்ளார். அவரை வரவேற்க ஸ்ருதி மும்பை விமான நிலையத்திற்கு சென்றிருந்தார். மைக்கேலை பார்த்தவுடன் கட்டிப்பிடித்து வரவேற்றார்.

 

ஸ்ருதி ரொம்ப பிசியாக இருப்பதால் அவரால் லண்டன் செல்ல முடியவில்லை. இதையடுத்து அவரை சந்திக்க மைக்கேல் மும்பைக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மைக்கேல் ஸ்ருதியுடன் சென்னை வந்து உலக நாயகன் கமல் ஹாஸனை சந்தித்து பேசவிருப்பதாக கூறப்படுகிறது. மைக்கேல் ஏற்கனவே கமலை சந்தித்து பேசியுள்ளார்.

 

ஸ்ருதியும், மைக்கேலும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மைக்கேல் கமல் ஹாஸனை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

    More Latest Events..

கார்த்தி படத்திற்கு முதன் முறையாக இசையமைக்கும் முன்னணி இசையமைப்பாளர்
விஜய் போஸ்ட்டரை கிழித்து ரகளை செய்த அமைப்பினர்
வைரமுத்து குறித்த வழக்கில் அதிரடி தீர்ப்பு
கமலை அடுத்து ரஜினி டைட்டிலில் சிபிராஜ்
கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாம்
25 வருடத்தில் முத்திரை பதித்த முக்கிய நாள்! விஜய் ஸ்பெஷல் - ரசிகர்கள் கொண்டாட்டம்
பூஜையுடன் தொடங்கிய ஹிப்ஹாப் ஆதியின் அடுத்த படம்
ஜனவரி 26ம் தேதி வெளியாகும் ‘இரும்புத்திரை’!
சூர்யா ரசிகர்களுக்கு இன்று சிறப்பு விருந்தளிக்கும் படக்குழு
ராதாரவியை நீக்கிய வழக்கு: விஷால் நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு