நாட்டில் எந்த பிரச்சனை என்றாலும் முதலில் பாதிக்கப்படுவது சினிமாக்காரர்கள் தான். மேலும், சினிமாவை தான் ரிலிஸ் செய்யக்கூடாது என்று கலாட்டா செய்கின்றனர்.
அந்த வகையில் பெங்களூரில் கன்னட அமைப்பினர்கள் தமிழ் கவுன்சிலர் ஒருவரை எதிர்த்து ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அப்போது அந்த பகுதியில் ஒட்டியிருந்த விஜய் போஸ்ட்டரை கிழித்தும், தமிழ் நடிகர்களை திட்டியும் கோஷம் எழுப்பினர்.
இவை அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, கவுன்சிலர் மேல் கோபத்திற்கும் சினிமா கலைஞர்களுக்கு என்ன சம்மந்தம் என சமூக வலைத்தளங்களில் கேட்டு வருகின்றனர்.