லாஸ் ஏஞ்சல்ஸ்: தனக்கு ஹெச்.ஐ.வி. வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் அபாயத்தை ஏற்படுத்தியதாகக் கூறி ஹாலிவுட் நடிகர் சார்லி ஷீன் மீது அவரது முன்னாள் காதலி வழக்கு தொடர்ந்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த ஹாலிவுட் நடிகர் சார்லி ஷீன். அவருக்கு ஹெச்.ஐ.வி. தாக்குதல் இருப்பது கடந்த 2011ம் ஆண்டு தெரிய வந்தது. இதையடுத்து கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் 17ம் தேதி கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் தனக்கு ஹெச்.ஐ.வி. தாக்குதல் இருப்பதை ஒப்புக் கொண்டார்.
இந்நிலையில் தனக்கு ஹெச்.ஐ.வி. வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் அபாயத்தை ஏற்படுத்தியதாகக் கூறி சார்லி மீது அவரின் முன்னாள் காதலி ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
முன்னதாக இதே காரணத்தை சொல்லி சார்லியின் மற்றொரு முன்னாள் காதலியான் ஸ்காட்டின் ரோஸ் வழக்கு தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.