நியூயார்க்: பிரபல பாடகி ரிஹானா சவுதியை சேர்ந்த தொழில் அதிபர் ஹஸன் ஜமீலை காதலிக்கிறாராம். அமெரிக்காவை சேர்ந்தவர் பிரபல பாடகியும், நடிகையுமான ரிஹானா(29). அவர் சவுதி அரேபியாவை சேர்ந்த தொழில் அதிபர் ஹஸன் ஜமீலை காதலிக்கிறாராம். இந்த செய்தி தீயாக பரவியுள்ளது.
உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான அப்துல் லதீப் ஜமீல் நிறுவன துணை தலைவராக உள்ளார் ஹஸன் ஜமீல். சவுதி அரேபியாவில் டொயோட்டா நிறுவன கார்களை வினியோகிக்கும் உரிமை ஜமீல் நிறுவனத்திடம் உள்ளது.
ஜமீல் குடும்பத்தார் சவுதியை சேர்ந்த சாக்கர் குழுவான ஜமீல் லீக்கின் உரிமையாளர்கள் ஆவர். இந்நிலையில் ஜமீலும், ரிஹானாவும் நீச்சல் குளத்தில் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் ஜமீல்.
ஜமீலும், ரிஹானாவும் லிப் டூ லிப் கொடுக்கும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளது. புகைப்படங்களை ஜமீலே வெளியிட்டுள்ளார். ஜமீலும், ரிஹானாவும் சேர்ந்து ஸ்பெயினில் ஓய்வு எடுத்துள்ளனர்.
முன்னதாக ரிஹானா டிரேக் என்பவரை காதலித்தார். ஹஸன் ஜமீலோ சூப்பர் மாடலான நவோமி காம்ப்பெல்லை காதலித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.