ரஜினியின் 2.ஓ... வைரலாகும் ஹாலிவுட் புரமோஷன்!
01 Saturday Jul 2017

ரஜினியின் அடுத்த பிரமாண்ட படமான 2.ஓ புரமோஷன் ஹாலிவுட்டில் தொடங்கிவிட்டது. ஒரு பக்கம் ரஜினி உருவம், மறுபக்கம் படத்தின் டிசைன் பொறிக்கப்பட்ட ராட்சத ஹாட் ஹேர் (வெப்பக் காற்று) பலூனை ஹாலிவுட் லோகோ பதிக்கப்பட்ட மவுன்ட் லீ என்ற மலைச் சிகரத்துக்கு எதிரே பறக்க விட்டுள்ளனர். ஒரு தமிழ்ப் படத்துக்காக இப்படி ஒரு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது அமெரிக்கர்கள் சுவாரஸ்யத்துடன் பார்த்துவிட்டுச் செல்கின்றனர்.

 

ரூ 400 கோடி செலவில் ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் புதிய படம் ‘2.ஓ'. இயக்குநர் ஷங்கர் இயக்கி வரும் இப்படத்தில் பாலிவுட் அக்ஷய்குமார் வில்லனாக நடிக்கிறார். எமி ஜாக்சன் கதாநாயகியாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. 

 

 

இந்நிலையில், இப்படத்தின் புரோமோஷன்களை மிகவும் பிரம்மாண்டமாக செய்ய படக்குழுவினர் திட்டமிட்டனர். அதன்படி, 100 அடி உயர வெப்பக் காற்று பலூன்களில் ரஜினி உருவம் மற்றும் 2.ஓ லோகோவை பதித்து பறக்க விட முடிவு செய்தனர்.

 

இந்நிலையில், வெப்பக்காற்று பலூனில் 2.ஓ படத்தின் விளம்பரங்களை அச்சடிக்கும் பணி முடிவடைந்து, நேற்று பலூனை பறக்கவிடுடும் முன்னோட்ட நிகழ்ச்சி நடந்தது.

 

இந்த முன்னோட்டத்தில் கலந்து கொண்ட லைகா நிர்வாகி ராஜு மகாலிங்கம், பலூனில் ஏறி பறந்த காட்சியும், அதன் புகைப்படங்களும் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.தற்போது, இப்பலூன்களை பறக்கவிட வானிலை மையத்தின் அனுமதிக்காக படக்குழுவினர் காத்திருக்கின்றனர். அனுமதி கிடைத்த பின்னர், இப்பலூன்கள் ஹாலிவுட்டில் பறக்கும் எனத் தெரிகிறது.

 

    Related News

வார் ஃபார் த ப்ளானட் ஆப் த ஏப்ஸ்!
ரஜினியின் 2.ஓ... வைரலாகும் ஹாலிவுட் புரமோஷன்!
சவுதி தொழில் அதிபரை காதலிக்கும் பிரபல பாடகி: கசமுசா புகைப்படங்களால் பரபரப்பு
டாப்லெஸ்ஸாக படுத்துக்கிட்டு கஞ்சா குடிக்கும் போட்டோவை வெளியிட்ட நடிகை
எனக்கு ஹெச்.ஐ.வி. கொடுக்கப் பார்த்தார்: நடிகர் மீது முன்னாள் காதலி வழக்கு
அதிபரை போட்டுத் தள்ள வேண்டிய நேரம் வந்துடுச்சு: டிரம்ப் பற்றி பேசிய நடிகர்
ஹாரி பாட்டர் பட நடிகர் தூக்கத்திலேயே மரணம்: ஹாலிவுட் இரங்கல்
பிரமாண்டத்திற்காக பிளாஸ்டிக் சர்ஜரி.. மாடல் அழகி மரணம்.. பிறர் பாடம் கற்பார்களா?
உள்ளாடை இல்லாமல் ஹோட்டலுக்கு சென்ற பிரபல நடிகை
தாத்தா ஆக வேண்டிய வயதில் இரட்டை குழந்தைகளுக்கு அப்பாவான பிரபல நடிகர்