கலாபவன் மணி மரணத்திலும் திலீபுக்கு தொடர்பு.. மலையாள இயக்குநரின் பரபர குற்றச்சாட்டு!
13 Thursday Jul 2017

அடுத்தடுத்த அதிர்ச்சி சம்பவங்களால் கேரள திரையுலகம் பரபரத்துக் கிடக்கிறது. கடந்த பிப்ரவரி 17-ம் தேதி பாவனா கடத்தி பலாத்காரம் செய்யப்பட்டார். அப்போதே இதன் பின்னணியில் நிச்சயம் திரையுலக சக்திகள் இருப்பதாகக் கூறப்பட்டது.

 

பாவனாவைக் கடத்தி மானபங்கம் செய்து, அதை வீடியோ எடுத்த பல்சர் சுனிலும் கூட்டாளிகளும் கைதானதிலிருந்து போலீசார் விசாரணையை முடுக்க, அது திலீப் - காவ்யா மாதவனிடம் வந்து நிற்கிறது. மேலும் விசாரித்தால் சில சீனியர் நடிகர்கள், அமைச்சர்கள் கூட மாட்டும் ஆபத்து இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக நடிகரும் அமைச்சருமான முகேஷ் மீது பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் கைதான திலீப் மீது வேறொரு குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. கலாபவன் மணி மரணத்தில் திலீப்புக்கு தொடர்பு இருப்பதாகவும், அதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் மலையாள பட இயக்குனர் ஒருவர் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். இயக்குநர் பைஜூ இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் நடிகர் கலாபவன் மணியின் சாவுக்கு திலீப்தான் காரணம். அதற்கு உரிய ஆவணங்கள் என்னிடம் உள்ளன என்றும் கூறியுள்ளார். கொச்சி மாவட்டத்தில் உள்ள கொட்டாரகராவில் உள்ள சி.பி.ஐ. அலுவலத்தில் இதுகுறித்துப் புகார் அளிக்கப் போகிறாராம் பைஜூ. கலாபவன் மணி மரணத்தில் பல சந்தேகங்கள் இருப்பதாகவும், திரையுலகினரே கூட காரணமாக இருக்கலாம் என்றும் ஆரம்பத்திலிருந்தே மணியின் உறவினர்கள் குற்றம் சாட்டிவந்தது குறிப்பிடத்தக்கது.

    Related News

திலீப் கைது... தமிழ் ஹீரோக்கள் குஷி!
திலீப் கைது... தமிழ் ஹீரோக்கள் குஷி!
பெருந்தன்மையா விட்டுக்கொடுத்த மஞ்சுவையே இப்படி செய்ய வைத்த திலீப்
கலாபவன் மணி மரணத்திலும் திலீபுக்கு தொடர்பு.. மலையாள இயக்குநரின் பரபர குற்றச்சாட்டு!
நடிகர் திலீப்பின் மேனேஜர் தலைமறைவு: போலீஸ் வலைவீச்சு
பாவனாவை அசிங்கப்படுத்தியதற்கு பின்னால் சதி இருப்பதை முதலில் கூறியது யார் தெரியுமா?
பாவனா கடத்தல் சக்சஸாகி இருந்தால் திலீப்புக்கு ரூ. 62 கோடி கிடைத்திருக்குமாம்
பாவனா வழக்கில் காவ்யாவுக்கு எதிராக கிடைத்த 2 ஆதாரங்கள்: கஸ்டடியில் எடுக்கும் போலீஸ்?
பாவனாவை மானபங்கப்படுத்த 2013ம் ஆண்டே திட்டம் தீட்டிய திலீப்: பகீர் தகவல்
பாவனா கடத்தல்... பலாத்காரம்... வீடியோ ரெகார்டிங்.. ஏன் இந்த கொடூரம்?