பெருந்தன்மையா விட்டுக்கொடுத்த மஞ்சுவையே இப்படி செய்ய வைத்த திலீப்
13 Thursday Jul 2017

திருவனந்தபுரம்: திலீப் கைதானதையடுத்து தனது மகள் மீனாட்சியை தன்னுடன் அனுப்பி வைக்கக் கோரி நடிகை மஞ்சு வாரியர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. மலையாள நடிகர் திலீப் நடிகை மஞ்சு வாரியரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு மீனாட்சி என்ற மகள் உள்ளார். காவ்யா மாதவன் நடுவில் வந்ததால் திலீப், மஞ்சு பிரிந்து விவாகரத்து பெற்றனர். மீனாட்சி அப்பாவுடன் சென்றுவிட்டார். மீனாட்சிக்கு அப்பா தான் ரொம்ப பிடிக்கும்.

 

திலீப்பின் இரண்டாவது மனைவியான காவ்யா மாதவனுக்கும், மீனாட்சிக்கும் இடையே பிரச்சனையாக உள்ளது என்று மலையாள மீடியாக்கள் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகின்றன.

 

திலீப் கைதானதையடுத்து மீனாட்சியை தனது பராமரிப்பில் விடுமாறு கோரி மஞ்சு வாரியர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

திலீப்பை பிரிந்த பிறகு மஞ்சு அவருக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. திலீப்பேட்டன் மீது மரியாதை வைத்துள்ளேன். அவர் எங்கள் மகளை நல்லபடியாக பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று மஞ்சு முன்பு தெரிவித்திருந்தார்.

ஏற்கனவே காவ்யாவுக்கும், மீனாட்சிக்கும் இடையே பிரச்சனை என்று கூறப்படும் நிலையில் மஞ்சு மனு தாக்கல் செய்துள்ளார். மீனாட்சியே மஞ்சுவிடம் சென்றுவிடலாமா என்ற யோசனையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

    Related News

திலீப் கைது... தமிழ் ஹீரோக்கள் குஷி!
திலீப் கைது... தமிழ் ஹீரோக்கள் குஷி!
பெருந்தன்மையா விட்டுக்கொடுத்த மஞ்சுவையே இப்படி செய்ய வைத்த திலீப்
கலாபவன் மணி மரணத்திலும் திலீபுக்கு தொடர்பு.. மலையாள இயக்குநரின் பரபர குற்றச்சாட்டு!
நடிகர் திலீப்பின் மேனேஜர் தலைமறைவு: போலீஸ் வலைவீச்சு
பாவனாவை அசிங்கப்படுத்தியதற்கு பின்னால் சதி இருப்பதை முதலில் கூறியது யார் தெரியுமா?
பாவனா கடத்தல் சக்சஸாகி இருந்தால் திலீப்புக்கு ரூ. 62 கோடி கிடைத்திருக்குமாம்
பாவனா வழக்கில் காவ்யாவுக்கு எதிராக கிடைத்த 2 ஆதாரங்கள்: கஸ்டடியில் எடுக்கும் போலீஸ்?
பாவனாவை மானபங்கப்படுத்த 2013ம் ஆண்டே திட்டம் தீட்டிய திலீப்: பகீர் தகவல்
பாவனா கடத்தல்... பலாத்காரம்... வீடியோ ரெகார்டிங்.. ஏன் இந்த கொடூரம்?