போட்டோவில் இருக்கும் பாப்பா எந்த ஹீரோ என்று கண்டுபிடிங்க
17 Monday Jul 2017

ஹைதராபாத்: நடிகர் பிரபாஸின் சிறுவயது புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

பாகுபலி மற்றும் பாகுபலி 2 படம் மூலம் உலகப் பிரபலமானவர் பிரபாஸ். தற்போது அவர் சூஜீத் இயக்கத்தில் சாஹோ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அவரை பாலிவுட்டில் அறிமுகம் செய்து வைக்க பிரபல இந்தி இயக்குனர் கரண் ஜோஹார் நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் பிரபாஸின் ரசிகர்கள் அவரின் சிறுவயது புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. புகைப்படத்தில் இருப்பது பிரபாஸ் என்பதையே கண்டுபிடிக்க முடியாதபடி வித்தியாசமாக உள்ளார். பிரபாஸின் ரசிகைகளோ புகைப்படத்தை பார்த்துவிட்டு க்யூட் என்கிறார்கள்.

 

    Related News