காத்து வாங்கும் தியேட்டர்கள்: ஆன்லைன் முன்பதிவு கட்டணத்தை ரத்து செய்த அபிராமி ராமநாதன்
17 Monday Jul 2017

சென்னை: அபிராமி மெகா மால் தியேட்டர்களில் சினிமா டிக்கெட்டுக்கான ஆன்லைன் முன்பதிவு கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அதன் உரிமையாளர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி வரி விதிப்பால் சினிமா டிக்கெட்டுகளின் விலை உயர்ந்துள்ளது. 100 ரூபாய்க்கு மேலான சினிமா டிக்கெட்டுகளுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது.

 

சென்னையில் உள்ள தியேட்டர்களில் ரூ. 120க்கு விற்பனையான சினிமா டிக்கெட்டுகள் தற்போது ரூ. 153க்கு விற்கப்படுகிறது. ஆன்லைனில் முன்பதிவு செய்தால் 30 சதவீதம் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இதனால் வரியை நினைத்து பயந்து தியேட்டருக்கு வரும் கூட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. வார இறுதி நாட்களில் கூட தியேட்டர்களில் கூட்டம் இல்லை. இந்நிலையில் அபிராமி மெகா மால் தியேட்டர்களின் உரிமையாளரான அபிராமி ராமநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஜி.எஸ்.டி. மற்றும் தமிழக அரசின் கேளிக்கை வரி விதிப்பால் தியேட்டர் டிக்கெட் கட்டணம் கணிசமாக உயர்ந்து விட்டது. இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது கூடுதலாக 30 சதவீதம் செலவாகிறது. எனவே தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் குறைந்துவிட்டது. ரசிகர்கள் பாதிக்காமல் இருக்க அபிராமி மாலில் ஆன்லைன் முன் பதிவு கட்டணத்தை ரத்து செய்கிறேன். இது மற்ற தியேட்டர்களுக்கு முன் மாதிரியாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

 

 

    Related News

எங்களுக்கு வெள்ளம் வேண்டா, ஓவியா மதி.. பைத்தியம் எப்படி முத்திப் போச்சு பாருங்க!
'அற்புதம்... அற்புதம்...' - விக்ரம் வேதா படத்துக்கு ரஜினி பாராட்டு!
அடப் பாவிகளா, தெலுங்கு பிக் பாஸும் காப்பியா?
ஜூலியை அடிம்மா ஓவியா: ஐடியா கொடுக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
இப்போ காயத்திரிய நல்லவா மாறி காட்டுறாங்களே எதுனா உள்குத்து இருக்குமோ?
'கண்ணடிச்சு கூப்பிட்டும் வராத பொம்பளை கைய பிடிச்சு இழுத்தா மட்டும் வந்துடவா போவுது!'
கபாலி மிஸ் பண்ணியதை காலா வாங்குவார்...?
சான்ஸ் கிடைக்கும்போது எல்லாம் கப் கப்புன்னு கட்டிப்புடிக்கும் சினேகன்
சேரி பிஹேவியர்.... காயத்ரி ரகுராமை பிசிஆர் சட்டத்தில் கைது செய்ய போலீசில் புகார்!
விஐபி 2 படத்தில் அனிருத்தை ஓரங்கட்டினோமா?: சவுந்தர்யா