பாண்ட் 25: ஆனால் அந்த நடிகர் தான் கை நரம்பை அறுத்துக்குவேன் என்றாரே?
28 Friday Jul 2017

நியூயார்க்: ஜேம்ஸ் பாண்ட் 2019ம் ஆண்டு உங்களை மீண்டும் சந்திக்க வருகிறார். தற்போது ஜேம்ஸ் பாண்டாக இருப்பது இங்கிலாந்தை சேர்ந்த நடிகர் டேனியல் கிரெய்க். அவர் 2006ம் ஆண்டில் இருந்து ஜேம்ஸ் பாண்டாக நடித்து வருகிறார்.

அவர் கெசினோ ராயல், குவான்டம் ஆஃப் சொலேஸ், ஸ்கைஃபால் மற்றும் ஸ்பெக்டர் ஆகிய பாண்ட் படங்களில் நடித்துள்ளார். டேனியல் கிரெய்கிற்கு மீண்டும் பாண்டாக நடிக்க இஷ்டம் இல்லை. நான் மீண்டும் பாண்டாக நடிப்பதற்கு பதில் என் கை நரம்பை அறுத்துக் கொள்வேன். அப்படி நான் மீண்டும் பாண்டாக நடிக்க வந்தால் அது பணத்திற்காக மட்டுமே என பேட்டியளித்திருந்தார் கிரெய்க். இந்நிலையில் ஜேம்ஸ் பாண்ட் பிரான்சைஸின் 25வது படம் தயாராக உள்ளது. அதில் கிரெய்க் தான் பாண்டாக நடிக்கிறாரா என்பது தெரியவில்லை. படம் 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியாக உள்ளது. பாண்ட் 25 படத்தை மைக்கேல் ஜி வில்சன் மற்றும் பார்பரா ப்ரொக்கோலி ஆகியோர் தயாரிக்கிறார்கள்.

 

    Related News

ஆபாச பத்திரிகை விற்று பள்ளியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட பிரபல நடிகர்
பாண்ட் 25: ஆனால் அந்த நடிகர் தான் கை நரம்பை அறுத்துக்குவேன் என்றாரே?
மகன் இறந்த 6 மாதத்தில் ஹோட்டலில் பிணமாகக் கிடந்த பிரபல நடிகர்
பிரபல பாடகர் தற்கொலை: வீட்டில் பிணமாகக் கண்டுபிடிப்பு
வார் ஃபார் த ப்ளானட் ஆப் த ஏப்ஸ்!
ரஜினியின் 2.ஓ... வைரலாகும் ஹாலிவுட் புரமோஷன்!
சவுதி தொழில் அதிபரை காதலிக்கும் பிரபல பாடகி: கசமுசா புகைப்படங்களால் பரபரப்பு
டாப்லெஸ்ஸாக படுத்துக்கிட்டு கஞ்சா குடிக்கும் போட்டோவை வெளியிட்ட நடிகை
எனக்கு ஹெச்.ஐ.வி. கொடுக்கப் பார்த்தார்: நடிகர் மீது முன்னாள் காதலி வழக்கு
அதிபரை போட்டுத் தள்ள வேண்டிய நேரம் வந்துடுச்சு: டிரம்ப் பற்றி பேசிய நடிகர்