ஆபாச பத்திரிகை விற்று பள்ளியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட பிரபல நடிகர்
28 Friday Jul 2017

நியூயார்க்: ஆபாச பத்திரிகைகள் விற்பனை செய்ததற்காக பள்ளியில் இருந்து நீக்கப்பட்டவர் ஹாலிவுட் நடிகர் ராபர்ட் பேட்டின்சன். ட்வைலைட் ஹாலிவுட் படங்கள் மூலம் பிரபலமானவர் ராபர்ட் பேட்டின்சன். ட்வைலைட் சீரிஸ் படங்களில் நடித்த க்ரிஸ்டன் ஸ்டூவர்டை காதலித்து பிரிந்தார். தற்போது அவர் பாடகி எப்கேஏ ட்விக்ஸை காதலித்து வருகிறார். இந்நிலையில் ராபர்ட் நிகழ்ச்சி ஒன்றில் கூறியிருப்பதாவது,

 

நான் இந்த விஷயத்தை இதுவரை யாரிடமும் கூறியது இல்லை. நான் ஆபாச பத்திரிகைகளை திருடி பள்ளியில் விற்பனை செய்திருக்கிறேன். அதன் மூலம் எனக்கு நிறைய பணம் கிடைத்தது.

 

ஆபாச பத்திரிகைகளை வைத்து என்ன செய்வது என்று மாணவர்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. இருப்பினும் அதை அதிக விலைக்கு வாங்குவார்கள்.

 

நான் கடைக்கு சென்று ஒன்று அல்லது இரண்டு ஆபாச பத்திரிகைகளை திருடி என் பைக்குள் போட்டுக் கொள்வேன். பள்ளி சீருடையில் சென்றே திருடுவேன்.

 

ஒரு முறை என் இரண்டு நண்பர்களுடன் கடைக்கு சென்று ஆபாச பத்திரிகை திருடி மாட்டிக் கொண்டேன். உடனே கடைக்காரர் என் பள்ளியை தொடர்பு கொண்டு தெரிவித்துவிட்டார். இதனால் என்னை பள்ளியில் இருந்து நீக்கிவிட்டனர் என்றார் ராபர்ட்.

 

    Related News

ஆபாச பத்திரிகை விற்று பள்ளியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட பிரபல நடிகர்
பாண்ட் 25: ஆனால் அந்த நடிகர் தான் கை நரம்பை அறுத்துக்குவேன் என்றாரே?
மகன் இறந்த 6 மாதத்தில் ஹோட்டலில் பிணமாகக் கிடந்த பிரபல நடிகர்
பிரபல பாடகர் தற்கொலை: வீட்டில் பிணமாகக் கண்டுபிடிப்பு
வார் ஃபார் த ப்ளானட் ஆப் த ஏப்ஸ்!
ரஜினியின் 2.ஓ... வைரலாகும் ஹாலிவுட் புரமோஷன்!
சவுதி தொழில் அதிபரை காதலிக்கும் பிரபல பாடகி: கசமுசா புகைப்படங்களால் பரபரப்பு
டாப்லெஸ்ஸாக படுத்துக்கிட்டு கஞ்சா குடிக்கும் போட்டோவை வெளியிட்ட நடிகை
எனக்கு ஹெச்.ஐ.வி. கொடுக்கப் பார்த்தார்: நடிகர் மீது முன்னாள் காதலி வழக்கு
அதிபரை போட்டுத் தள்ள வேண்டிய நேரம் வந்துடுச்சு: டிரம்ப் பற்றி பேசிய நடிகர்