இந்தியன் 2 படத்தில் பிரபல இசையமைப்பாளர்! வெளியான தகவல்
19 Tuesday Dec 2017

சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க இருக்கும் படம் இந்தியன் 2. இப்படத்தின் அறிவிப்பை கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மேடையிலேயே அறிமுகப்படுத்தி விட்டார்.

இந்த நிகழ்ச்சியில் கமல், இயக்குனர் சங்கர், தயாரிப்பாளர் தில் ராஜூ என மூவரும் ஒன்றாக மகிழ்ச்சியுடன் தகவலை பகிர்ந்து கொண்டனர். சமீபமாக அனிருத் தான் இப்படத்திற்கு இசைமைக்கவுள்ளார் என தகவல் பரவியது.

தற்போது படக்குழு வட்டாரம் இந்த தகவலை ஏற்றுக்கொண்டுள்ளது. மேலும் இதில் பிரபல ஆர்ட் டைரக்டரான முத்துராஜ் இணைந்துள்ளாராம். இவர் சமீபத்தில் வேலைக்காரன் படத்திலும் பணியாற்றியுள்ளார்.

மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவில்லை என்பதும் உறுதியாகியுள்ளது

    Related News