நேரில் ஆஜராக விஷாலுக்கு கோர்ட் உத்தர
21 Thursday Dec 2017

நடிகர் விஷால் சமீபத்தில் அரசியலில் நுழைந்து ஆர்கே நகர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால் அது நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட நடிகர் ராதாரவி சென்ற வருடம் தொடர்ந்த விசாரணைக்கு விஷால் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கோர்ட் உத்தரவு வரும் வரை ராதாரவி மற்றும் சரத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என கூறிய பிறகு, பொதுக்குழு கூட்டத்தில் இருவரையும் சங்கத்தில் இருந்து நீக்கியது நீதிமன்ற அவமதிப்பு என ராதாரவி வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணைக்காக வரும் 22ம் தேதி விஷால் தவறாமல் ஆஜராகவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    Related News