144
17 Thursday Dec 2015

நடிகர் :சிவா, அசோக் செல்வன்

நடிகை :ஓவியா, சுருதி ராமகிருஷ்ணன்

இயக்குனர் :ஜி.மணிகண்டன்

இசை :சான் ரோல்டன்

ஒளிப்பதிவு :ஆர்.பி.குருதேவ்

கதையின் கரு: பதுக்கல் தங்கத்துக்காக நடக்கும் போராட்டம்...

 

இரண்டு கிராமங்களுக்குள் ஒரு குளத்தை மையமாக வைத்து மோதல். அந்த குளத்தில் உடைந்த கண்ணாடியில் செய்த பிள்ளையார் சிலையை கரைக்க ஒரு கிராமத்தினர் முயற்சிக்கின்றனர். இதனால் கலவரம் மூளும் சூழ்நிலை. கலெக்டர் 144 தடை உத்தரவு பிறப்பிக்கிறார்.

 

சிலைக்குள் மதுசூதனன் பலகோடி மதிப்புள்ள தங்க கட்டிகளை திருடி பதுக்கி வைக்கிறார். சிறு திருட்டுகள் செய்து அடிக்கடி போலீசில் சிக்கும் சிவாவுக்கு பதுக்கல் தங்கம் பற்றிய ரகசியம் தெரிய- அதை காதலி ஓவியாவுடன் சேர்ந்து கொள்ளையடிக்க முயற்சிக்கிறார்.

 

இவர்களுடன் மதுசூதனின் டிரைவர் அசோக்செல்வன், முனீஷ்காந்த் ஆகியோரும் கூட்டு சேர்கின்றனர். போலீஸ் காவலை மீறி தங்கத்தை கொள்ளையடிப்பதும், வில்லன்கள் துரத்தும் கண்ணாமூச்சி ஆட்டமும் மீதி கதை.

 

சிவா கலகலப்பான திருடனாக வருகிறார். ஓவியாவுடன் நகைக்கடையில் திருட்டு சாவி போட்டு கொள்ளையடிப்பது, ரகளை. தடை உத்தரவு போடப்பட்ட கிராமத்துக்குள் சுரங்கம் வழியாக விநாயகர் சிலைக்குள் புகுந்து தங்க கட்டிகளை அள்ளும் காட்சிகள் சிரிக்க வைக்கிறது. ஓவியா விலைமாது கதாபாத்திரத்தில் கவர்ச்சி விருந்து அளிக்கிறார்.

 

அசோக் செல்வன், முதலாளி மகளை காதலிப்பது. திருடுவது, பிறகு காதலிக்காக திருந்துவது என வந்து போகிறார். ஸ்ருதி ராமகிருஷ்ணன் அழகான காதலி. நகைக்கடை உரிமையாளராக வரும் மதுசூதனன், வில்லனாக வரும் உதயபானு மகேஷ்வரன் ஆகியோரும் கதாபாத்திரங்களில் ஒன்றுகிறார்கள். வாய்பேச முடியாதவராக வரும் முனீஷ்காந்த் கலகலப்பூட்டுகிறார்.

 

கதையோட்டத்தில் அழுத்தம் இல்லை. நகைச்சுவையாக காட்சிகளை நகர்த்துவதில் மட்டும் டைரக்டர் மணிகண்டன் கவனம் செலுத்தி அதில் தேறியும் இருக்கிறார்.ஷான் ரோல்டன் பின்னணி இசையும் குருதேவின் ஒளிப்பதிவும் கூடுதல் பலம் சேர்க்கிறது.

    Related News...