ரெண்டு படமும் ஊத்திக்கிச்சு... மூணாவது படத்துக்கு பட்ஜெட் எகிறுது... அலறும் தயாரிப்பாளர்!
30 Friday Jun 2017

'கொஞ்ச நாள் ஒதுங்கி இருந்துட்டு சினிமா மேல இருந்த ஆசையில படம் எடுக்க வந்தது குத்தமாய்யா...' என்ற புலம்பல் சத்தம் சத்யமான தயாரிப்பாளர் அலுவலகம் பக்கம் கேட்கிறதாம். சத்யமான தயாரிப்பாளர் சிலகாலம் ஒதுங்கியிருந்து விட்டு கடந்த ஆண்டு ரீ எண்ட்ரி கொடுத்தார். ஒல்லி நடிகரையும் பறவை இயக்குநரையும் சேர்த்து ஒரு ரயில் படம் எடுத்தார். ரயில் ஃப்ளாட்பாரத்துக்கே வராமல் பின்னோக்கி ஓடிவிட்டது.

அடுத்து வாரிசு நடிகரை வைத்து ஒரு ரவுடி படம் எடுத்தார். அதுவும் கவிழ்த்துவிட்டது. இப்போது இருக்கும் ஒரே ஆறுதல் தல படம் மட்டும் தான். ஆனால் அதற்கும் தாறுமாறாக ஏறுகிறதாம் பட்ஜெட். மீண்டும் ஐரோப்பாவுக்கு சென்றிருக்கிறது படக்குழு. வயிற்றில் நெருப்பைக் கட்டி காத்திருக்கிறார் தயாரிப்பாளர்.

 

    Related News...