வளர்த்த கெடா மாருல பாயுதே... வருத்தத்தில் சேனல்!
03 Monday Jul 2017

டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்து மிக வேகமாக வளர்ந்து முன்னணி ஹீரோவாகவும் வசூல் மன்னனாகவும் மாறிவிட்டார் சிவ நடிகர். தங்களது சேனலில் இருந்தபோதும் சினிமாவுக்குள் நுழைந்தபோதும் நடிகருக்கு பெரிய ஆதரவாக இருந்தது சேனல்தான்.

ஆனால் வளர்ந்த பின்னர் நடிகர் சேனலை கண்டுகொள்வதில்லையாம். சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின் ஃபைனல் ரவுண்டுக்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டதற்கு மறுத்துவிட்டாராம். எனவே தங்களது பழைய கம்பெனி ஆர்ட்டிஸ்டான சாண்டலை வைத்து நடத்தினார்கள்.

வரவிருக்கும் படத்துக்கு சாட்டிலைட் உரிமைக்காக பேசும்போது அதற்கும் அடுத்த கமர்ஷியல் படத்தையும் சேர்த்தே பேசியிருக்கிறார்கள் சேனலில். அதை அப்புறம் பார்த்துக்கலாம் என்று சொல்லிவிட்டு அடுத்த சில நாட்களிலேயே சூரிய டிவிக்கு விற்றுவிட்டாராம் நடிகர். இதைத்தான் தாங்கிக்கொள்ள முடியாமல் தவிக்கிறது சேனல்.

    Related News...