நான் மாட்டேன், நானும் மாட்டேன்: மேட்டரே தெரியாமல் அடம்பிடிக்கும் இயக்குனர், நடிகர்
03 Monday Jul 2017

சென்னை: இரண்டாம் பாகத்தை எடுக்க மாட்டேன் என்று இயக்குனரும், நடிக்க மாட்டேன் என்று நடிகரும் அடம்பிடிக்கிறார்களாம். விரல் வித்தை நடிகரை வைத்து அந்த இளம் இயக்குனர் எடுத்த படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியானது. படத்தை பார்த்தவர்கள் எல்லாம் கழுவிக் கழுவி ஊத்துகிறார்கள். இது எல்லாம் ஒரு படமா என்று ஆளாளுக்கு திட்டுகிறார்கள்.

 

கொஞ்சம் கூட மெச்சூரிட்டி இல்லாமல் சின்னப்புள்ளத்தனமாக படத்தை எடுத்துள்ளனர் என்று நகைச்சுவை நடிகர் ஒருவர் கூட கிண்டல் செய்திருந்தார்

 

 

க்ளைமாக்ஸை சொல்லாமல் இரண்டாம் பாகத்தில் பார்க்குமாறு கூறினார்கள். ஆனால் முதல் பாகமே படுத்து தூங்கிவிட்டதால் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியை தயாரிப்பு நிறுவனம் கைவிட்டுவிட்டது.

 

இரண்டாம் பாகத்தை நான் எடுக்க மாட்டேன் என்று இயக்குனர் தெரிவித்துள்ளாராம். இரண்டாம் பாகத்தில் நான் நடிக்கவே மாட்டேன் என்று விரல் வித்தை நடிகர் மறுபக்கம் வீராப்பாக இருக்கிறாராம்.

 

என் முதல் படத்தை பார்த்தவர்கள் நான் பிட்டு படம் எடுக்க தான் லாயக்கு என்று நினைத்தார்கள். இந்த படம் வெளியான பிறகு அந்த இமேஜ் மாறும் என்றார் இயக்குனர். ஒன்னும் மாறவில்லை பாஸ்.

    Related News...