'அந்த' நடிகையை கடத்தி அசிங்கப்படுத்தியதில் பிரபல நடிகைக்கு தொடர்பா?
03 Monday Jul 2017

திருவனந்தபுரம்: பிரபல நடிகை காரில் கடத்தி மானபங்கப்படுத்தப்பட்டதில் நடிகை காவ்யா மாதவனுக்கு தொடர்பு இருக்குமோ என்று மலையாள திரையுலகில் பேச்சு கிளம்பியுள்ளது. பிரபல மலையாள நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்டார். அவரை மலையாள நடிகர் திலீப் தான் ஆள் வைத்து அசிங்கப்படுத்தியதாக கிசுகிசுக்கப்படுகிறது. கடத்தல் வழக்கு தொடர்பாக போலீசார் திலீப்பிடம் கடந்த வாரம் 13 மணிநேரம் விசாரணை நடத்தினர்.

 

நடிகை கடத்தலில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனி அளித்த தகவலின்படி திலீப்பின் இரண்டாவது மனைவியான நடிகை காவ்யா மாதவனுக்கு சொந்தமான கடையில் போலீசார் 3 மணிநேரம் சோதனை நடத்தினர். 

 

காவ்யா மாதவனின் வீட்டில் ரெய்டு நடத்த போலீசார் இரண்டு முறை அங்கு சென்றுள்ளனர். ஆனால் அங்கு யாரும் இல்லாததால் திரும்பி வந்துவிட்டனர்.

 

காவ்யாவும், கடத்தப்பட்ட நடிகையும் ஒரு காலத்தில் நெருங்கிய தோழிகள். ஆனால் காவ்யும், திலீப்பும் வெளிநாட்டு நிகழ்ச்சி ஒன்றில் ஓவராக நெருக்கமானதை பார்த்த நடிகை திலீப்பின் அப்போதைய மனைவியான மஞ்சு வாரியரிடம் போட்டுக் கொடுத்தார். அதில் இருந்து திலீப் மற்றும் காவ்யாவுக்கு அந்த நடிகையை பிடிக்காது.

 

நடிகையை ஆள் வைத்து கடத்தி அசிங்கப்படுத்தியது திலீப் என்று கிசுகிசுக்கப்படும் நிலையில் காவ்யாவின் கடையில் ரெய்டு நடந்துள்ளது. ஒரு வேளை பழைய விஷயங்களை மனதில் வைத்து காவ்யாவும் இதில் தலையிட்டிருப்பாரோ என்று மலையாள திரையுலகில் பேசப்படுவதாக மலையாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

 

    Related News...