கமல் மீதான விமர்சனத்தை முதல்வர் தவிர்த்திருக்கலாம்.. சொல்றது யாருன்னு பாருங்க!
27 Thursday Jul 2017

சென்னை: கமல் ஹாஸன் மீதான விமர்சனத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தவிர்த்திருக்கலாம் என்று நடிகர் விஷால் கூறியுள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அவரிடம் கமல்ஹாஸன் அரசு மீதான கமல் ஹாஸனின் விமர்சனங்கள் குறித்து செய்தியார்கள் கேள்வி எழுப்பினர்.

 

அதற்கு பதிலளித்த முதல்வர், "கமல் ஹாசனுக்கு அரசியல் தெரியாது. அவர் நடித்துக்கொண்டு இருக்கிறார். கமல் ஹாசன் அரசியலுக்கு வந்தபின்பு கருத்து தெரிவித்தால் நாங்கள் பதில் சொல்வோம்," என்றார். இந்த நிலையில் நடிகர் சங்க பொதுசெயலாளர் விஷாலிடம் இதுகுறித்து செய்தியார்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், "திருட்டு விசிடி தயாரிப்பவர்கள் யார் என்பதை கண்டுபிடித்துவிட்டோம், அவர்களது விவரங்களை 2 வாரத்தில் அறிவிப்போம். கமல்ஹாசன் மீதான விமர்சனத்தை முதலமைச்சர் தவிர்த்திருக்கலாம். கமல்ஹாசனுக்கு, நடிகர் சங்கம் உறுதுணையாக இருக்கும்," என்றார். நேற்று முன்தினம்தான் முதல்வர் பழனிச்சாமியை விஷால் மற்றும் திரையுலகினர் நேரில் சந்தித்து நன்றி மற்றும் பாராட்டு தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

    Related News...

பிக் பாஸ் வீட்டில் சிசிடிவி கேமராவை உடைத்து தற்கொலை மிரட்டல் விடுத்த நடிகர் வெளியேற்றம்
பித்தலாட்ட பிக்பாஸ்!- ஒரு டெக்னிகல் அலசல்
இந்த மனுஷன் டயர்டே ஆகமாட்டாரா... தூக்கமே வராதா? தனுஷை வியக்கும் பிரபலங்கள்! #HBDDhanush
தனுஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்.... இது ஒரு தனுஷ் காலம்! #HBDDhanush
விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம்!
நான் அப்படி செஞ்சிருக்கக் கூடாது: இப்ப ஃபீல் பண்ணும் தனுஷ்
இரண்டே இரண்டு கேள்வி கேட்ட போலீஸ்: கதறி அழுத காவ்யா மாதவன்
கடுந்தமிழ், புரியாத வாக்கியங்கள்... கலங்கடிக்கும் கமல் ட்வீட்கள்!
அஜீத்தை பார்த்து பொறாமைப்படும் விஜய்: அட, நெசமாத்தாங்க!
சொன்ன மாதிரியே திடீர்னு கையில் குழந்தையுடன் வந்து நின்ற 'அம்மா' சன்னி லியோன்