இரண்டே இரண்டு கேள்வி கேட்ட போலீஸ்: கதறி அழுத காவ்யா மாதவன்
27 Thursday Jul 2017

கொச்சி: நடிகை கடத்தி மானபங்கப்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக போலீசார் நடிகை காவ்யா மாதவனிடம் விசாரணை நடத்தியபோது அவர் கதறி அழுதுள்ளார். பிரபல மலையாள நடிகை காரில் கடத்தி மானபங்கப்படுத்தப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது. இந்நிலையில் போலீசார் திலீப்பின் இரண்டாவது மனைவியான நடிகை காவ்யா மாதவனிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

 

காவ்யா மாதவனிடம் தொடர்ந்து 6 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான கேள்விகளுக்கு அவர் திருப்திகரமாக பதில் அளிக்கவில்லை என்று மலையாள செய்தி இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

 

விசாரணையின் போது காவ்யா மாதவன் அழுதாராம். அவரிடம் முக்கியமாக இரண்டு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. அதற்கும் அவர் சரியாக பதில் சொல்லவில்லையாம்.

 

நடிகை கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனி உங்கள் கடைக்கு ஏன் வந்தார்?, பாதிக்கப்பட்ட நடிகையுடனான உங்களின் நட்பு பகையாக மாறியது ஏன் என்று போலீசார் காவியாவிடம் கேட்டுள்ளார்கள்.

 

பல்சர் சுனி காவ்யாவின் கடைக்கு இரண்டு முறை வந்ததற்கான சிசி டிவி வீடியோ ஆதாரம் போலீசிடம் உள்ளது. இந்நிலையில் பல்சர் சுனியை யாரென்றே தெரியாது என காவ்யா தெரிவித்துள்ளாராம்.

    Related News...

பிக் பாஸ் வீட்டில் சிசிடிவி கேமராவை உடைத்து தற்கொலை மிரட்டல் விடுத்த நடிகர் வெளியேற்றம்
பித்தலாட்ட பிக்பாஸ்!- ஒரு டெக்னிகல் அலசல்
இந்த மனுஷன் டயர்டே ஆகமாட்டாரா... தூக்கமே வராதா? தனுஷை வியக்கும் பிரபலங்கள்! #HBDDhanush
தனுஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்.... இது ஒரு தனுஷ் காலம்! #HBDDhanush
விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம்!
நான் அப்படி செஞ்சிருக்கக் கூடாது: இப்ப ஃபீல் பண்ணும் தனுஷ்
கமல் மீதான விமர்சனத்தை முதல்வர் தவிர்த்திருக்கலாம்.. சொல்றது யாருன்னு பாருங்க!
கடுந்தமிழ், புரியாத வாக்கியங்கள்... கலங்கடிக்கும் கமல் ட்வீட்கள்!
அஜீத்தை பார்த்து பொறாமைப்படும் விஜய்: அட, நெசமாத்தாங்க!
சொன்ன மாதிரியே திடீர்னு கையில் குழந்தையுடன் வந்து நின்ற 'அம்மா' சன்னி லியோன்