நான் அப்படி செஞ்சிருக்கக் கூடாது: இப்ப ஃபீல் பண்ணும் தனுஷ்
27 Thursday Jul 2017

சென்னை: பேட்டியில் இருந்து பாதியில் கிளம்பிச் சென்றிருக்கக் கூடாது என்று நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார். விஐபி 2 படத்தை விளம்பரப்படுத்த ஹைதராபாத் சென்ற இடத்தில் டிவி 9 தெலுங்கு சேனலுக்கு பேட்டி அளித்தார் தனுஷ். அப்போது சுசீலீக்ஸ் மற்றும் குடும்ப பிரச்சனை பற்றி கேள்வி கேட்டதும் கோபித்துக் கொண்டு பாதியிலே கிளம்பிச் சென்றுவிட்டார். இந்நிலையில் இது குறித்து தனுஷ் தற்போது கூறியிருப்பதாவது,

 

பேட்டியின்போது நான் அப்படி நடந்திருக்கக் கூடாது. பொதுவாக நான் அமைதியான ஆள். ஆனால் நான் எப்படி நடந்திருக்கக் கூடாதோ அப்படி நடந்துவிட்டேன்.

 

பேட்டியின்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. ஆனால் அதற்காக நான் இப்படி நடந்திருக்கக் கூடாது தான். என் பட வேலைகளில் பிசியாக இருப்பதால் நான் இரண்டு வாரங்களாக தூங்கவில்லை. 

 

அந்த பேட்டியில் நான் நடந்து கொண்ட விதத்தை பார்த்து எனக்கே ஆச்சரியமாக உள்ளது. வேறு கேள்வி கேட்குமாறு பேட்டி எடுத்தவரிடம் நான் கூறியிருக்க வேண்டும் என்றார் தனுஷ்.

 

தனுஷ் நடிகை கஜோல் மற்றும் இயக்குனர் சவுந்தர்யா ரஜினிகாந்துடன் சேர்ந்து விஐபி 2 படத்தை விளம்பரப்படுத்தும் வேலையில் பிசியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


    Related News...

பிக் பாஸ் வீட்டில் சிசிடிவி கேமராவை உடைத்து தற்கொலை மிரட்டல் விடுத்த நடிகர் வெளியேற்றம்
பித்தலாட்ட பிக்பாஸ்!- ஒரு டெக்னிகல் அலசல்
இந்த மனுஷன் டயர்டே ஆகமாட்டாரா... தூக்கமே வராதா? தனுஷை வியக்கும் பிரபலங்கள்! #HBDDhanush
தனுஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்.... இது ஒரு தனுஷ் காலம்! #HBDDhanush
விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம்!
இரண்டே இரண்டு கேள்வி கேட்ட போலீஸ்: கதறி அழுத காவ்யா மாதவன்
கமல் மீதான விமர்சனத்தை முதல்வர் தவிர்த்திருக்கலாம்.. சொல்றது யாருன்னு பாருங்க!
கடுந்தமிழ், புரியாத வாக்கியங்கள்... கலங்கடிக்கும் கமல் ட்வீட்கள்!
அஜீத்தை பார்த்து பொறாமைப்படும் விஜய்: அட, நெசமாத்தாங்க!
சொன்ன மாதிரியே திடீர்னு கையில் குழந்தையுடன் வந்து நின்ற 'அம்மா' சன்னி லியோன்