ரூ. 1 'சி' மேட்டர்: நடிகையை சுற்றி சுற்றி வரும் புதுமுக இயக்குனர்கள்
27 Thursday Jul 2017

சென்னை: கோலிவுட்டின் புதுமுக இயக்குனர்கள் இந்தி சூப்பர் ஸ்டாரின் பேத்தியிடம் கதை சொல்லி ஓகே பண்ண அவரை சுற்றி சுற்றி வருகிறார்களாம். இந்தி சூப்பர் ஸ்டாரின் பேத்தி பெயரில் வெற்றியை வைத்திருக்கும் நடிகரின் படம் மூலம் கோலிவுட் வந்தார். அந்த படத்தில் அவர் ஆடிய நடனத்தை பார்த்தே பல ஹீரோக்கள் மயங்கிவிட்டனர்.

 

தற்போது அவர் ரப்பர் பாடி இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். முதல் படத்தில் நடித்தபோது அவர் ரூ. 1 கோடி அளவுக்கு பைனான்ஸ் செய்ததாக கூறப்படுகிறது. பைனான்ஸ் விஷயம் பற்றி கேள்விப்பட்ட புதுமுக இயக்குனர்கள் நடிகையிடம் கதை கூறி ஓகே பண்ண வேண்டி அவரை சுற்றி சுற்றி வருகிறார்களாம். இத்தனை இயக்குனர்கள் முந்தியடிப்பதை பார்த்து முதலில் மகிழ்ச்சி அடைந்துள்ளார் நடிகை. இந்நிலையில் அவருக்கு இயக்குனர்கள் ஆர்வம் காட்டுவதற்கான காரணம் தெரிந்துவிட்டதாம்.

    Related News...