சின்ன நம்பர் நடிகையின் ஆசைக்கு முட்டுக்கட்டை போட்ட தாயார்
27 Thursday Jul 2017

15 ஆண்டுகளுக்கும் மேலாக ஃபீல்டில் இருக்கும் சின்ன நம்பர் நடிகை 50 படங்களைத் தாண்டி விட்டார். இருந்தாலும் இப்போதும் கூட பரபரப்பாக நடித்துக்கொண்டிருக்கிறார். ஆனால் இனி இளம் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பது சிரமம். எனவே ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களில் நடிக்க முடிவு செய்ததோடு சொந்தப்படம் எடுக்கவும் ஹோட்டல் பிசினஸ் தொடங்கவும் எண்ணம் இருப்பதாகச் சொன்னார். ஆனால் அந்த இரண்டுக்குமே ஆரம்ப நிலையிலேயே அம்மா முட்டுக்கட்டை போட்டுவிட்டாராம். இரண்டிலுமே ஜெயித்தவர்களை விட தோற்றவர்கள் தாம் அதிகம். எனவே இப்போதைக்கு நடிப்பை மட்டும் பார்ப்போம் என்று அட்வைஸ் சொல்லிவிட்டாராம்.

 

அம்மா பேச்சை வேத வாக்காக எடுத்துக்கொண்ட நடிகை சமீபத்தில் மலையாள பக்கமும் கூட கவனத்தை திருப்பியுள்ளாராம்.

    Related News...