அவங்களுக்கு கொடுக்குறீங்க எனக்கு கொடுத்தா என்ன...? நியாயம் கேட்கும் உமி நடிகை!
27 Thursday Jul 2017

அந்த வெளிநாட்டு மாடல் நடிகை தென்னிந்திய மொழிகளில் முக்கியமாக தமிழில் நிலையான இடத்தை பிடிப்பதற்காக சென்னையிலேயே வீடு எடுத்து குடியேறினார். ஆனாலும் அவர் கேட்கும் சம்பளத்தால் வாய்ப்புகள் எதுவும் வரவில்லையாம்.

உச்ச நடிகருடன் தான் நடிக்கும் பிரம்மாண்ட படத்தைக் காரணம் காட்டி 4 விரல்களை நீட்டுகிறாராம். ஏற்கனவே பீட்டா பிரச்னையால் அம்மணியை புக் பண்ண யோசிப்பவர்கள் இந்த சம்பளத்தைக் கேட்டதும் பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடிவிடுகிறார்களாம்.

சர்ச்சை நடிகையின் பெயரைச் சொல்லி 'அவங்க கேட்டா தர்றீங்க... நான் கேட்டா அவாய்ட் பண்றீங்களே...' என்று நியாயம் கேட்கிறாராம்.

    Related News...