தனுஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்.... இது ஒரு தனுஷ் காலம்! #HBDDhanush
28 Friday Jul 2017

அது தனுஷ் ஆரம்ப காலத்தில் நடித்த படம் ஒன்றின் பிரஸ் ஷோ. இடைவேளையின்போது வெளியே வந்த பத்திரிகையாளர்களுள் ஒருவர் அடித்த கமெண்ட் 'இதெல்லாம் ஒரு மூஞ்சினு வெச்சிகிட்டு ஹீரோவா நடிக்க வந்துடுச்சு'. அந்த தனுஷ் தான் அடுத்த 7, 8 ஆண்டுகளில் தேசிய விருது நாயகன் ஆனார். தனுஷின் வளர்ச்சியை தூரமாக நின்று பார்த்தால் ஒரே இரவில் புகழ் உச்சிக்கு போனாற்போல்தான் தெரியும். ஆனால் அவரது கடின உழைப்பு தான் அவரை இந்த உயரத்துக்கு கொண்டு சென்றுள்ளது

கஸ்தூரிராஜா தான் கடைசியாக எடுத்த இரண்டு படங்கள் சரியாக போகாததால் முழுக்க முழுக்க இளமை ததும்ப எடுக்க திட்டமிட்ட படம் தான் துள்ளுவதோ இளமை. அந்த படத்தில் நடிக்கவைக்க திட்டமிட்டிருந்தது வேறொரு நடிகரை. செல்வராகவனின் வற்புறுத்தலால்தான் தனுஷை நடிக்க வைத்தார். படத்திற்கு கதை எழுதிய செல்வராகவனின் மனதில் இருந்தது தனுஷ்தான். விடலை பையன் ரோலை கனகச்சிதமாக செய்து அப்ளாஸை அள்ளினார் தனுஷ்.

 

அடுத்த ஆண்டான 2003 தான் தனுஷுக்கு மறக்க முடியாத ஆண்டாக அமைந்தது. தனுஷின் நடிப்பாற்றலை முழுவதுமாக காட்டியது செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த காதல் கொண்டேன். இன்னொரு புறம் திருடா திருடி படம் கமர்ஷியலாகவும் தனுஷை வெற்றி பெற வைத்தது. அந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமே அந்த மன்மத ராசா பாடலும் அதற்கான நடனமும் தான். அந்த பாடலில் தனுஷ் போட்ட குத்தாட்டத்தை பார்த்து தியேட்டரில் ஆடாதவர்கள் யாருமே இல்லை எனலாம். ஆனால் அந்த பாடல் காட்சி திருச்சி அருகே படமானபோது தனுஷுக்கு 100 டிகிரி காய்ச்சல் என்றால் நம்ப முடிகிறதா? அதோடு போட்ட ஆட்டம்தான் அவரை உச்சிக்கு கொண்டு சென்றது.

 

2004ம் ஆண்டும் தனுஷுக்கு இனிமையான ஆண்டுதான். யாருமே எதிர்பாராத வகையில் சூப்பர்ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து கரம் பிடித்தார் தனுஷ். அப்போது அவருக்கு வயது வெறும் 21தான். ரஜினியே டிக் அடித்தார் என்றால் மாப்பிள்ளையின் கேரக்டர் எப்படி இருந்திருக்கும் என்று பார்த்துக் கொள்ளுங்கள். எல்லாவற்றையுமே எளிதில் அடைந்த தனுஷ் அதை தக்க வைக்க போராடியது ஒரு சக்சஸ் ஸ்டோரியாகவே எழுதலாம். படங்களை தேர்வு செய்வதிலேயே தனுஷின் உள்ளேயே ஒரு இயக்குனர் இருக்கிறான் என்பது தெரியும்.

 

பாலுமகேந்திரா இயக்கிய அது ஒரு கனாக்காலமும், அண்ணன் இயக்கத்தில் தனுஷ் நடித்த புதுப்பேட்டையும் தனுஷின் இன்னொரு நடிப்பு பரிணாமத்தை காட்டியது. புதுப்பேட்டையில் அசர வைத்த தனுஷ் திருவிளையாடல் ஆரம்பம் மூலம் தான் தனது மாமனார் போல காமெடி உள்பட எல்லாமும் எனக்கு அத்துப்படி என்று காட்டினார்.

 

பொல்லாதவன் மூலம் தனுஷை தமிழ்நாட்டு ப்ரூஸ்லீயாக்கினார் வெற்றிமாறன். ஆடுகளம் படத்தில் கேபி.கருப்பாகவே வாழ்ந்து தேசிய விருது வாங்கினார் தனுஷ். இதுவரை சூப்பர்ஸ்டாருக்கே கிடைக்காத தேசிய விருது அவரது மருமகனுக்கு சில படங்களிலேயே, மிக இளம் வயதிலேயே கிடைத்தது. அந்தப் படத்தில் நடிப்பதற்காக தனுஷ் செய்த ஹோம்வொர்க் ஏராளம்.

 

தேசிய விருது நாயகன் உலக அளவில் புகழ் பெற்றது ஒரே ஒரு பாடலில். அது கொலவெறி. தனுஷின் நடிப்பில் இருப்பது போலவே அவரது குரலிலும் நம்மை ஈர்த்துவிடும் ஏதோ ஒரு வசீகரம் ஒளிந்திருக்கும். அது நம்மை நம்மை அறியாமலேயே ஆட வைக்கும், கண்ணீர் விட வைக்கும். அதுதான் உலக ரசிகர்களையே ஈர்த்தது.

 

கோலிவுட்டைத் தாண்டி பாலிவுட்டிலும் ரசிகர்களை பெற்றார் தனுஷ். அந்த அறிமுகமே அவரை பாலிவுட்டுக்கு ராஞ்சனா மூலம் இழுத்துச் சென்றது. நடிப்புக்குதான் மொழி கிடையாதே? அங்கு தனுஷின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு. தன் கழுத்தை தானே அறுத்து தற்கொலை செய்துகொள்ளும் சைக்கோ முதல் தான் காதலித்த பெண்ணின் அண்ணனிடமே பணம் கறந்து முன்னேறும் காமெடி ஹீரோ வரை தனுஷ் ப்பாத்திரத்துக்கும் பொருந்திப் போகிறவர். மரியான் படத்தில் தனுஷை தவிர வேறொரு நடிகரை அந்த பாத்திரத்துக்கு பொருத்திப் பார்க்கவே முடியாது. அமிதாப்பை மட்டுமே இயக்கி கொண்டிருந்த பால்கே தனுஷின் நடிப்பை ஆகா ஓஹோ வென புகழ்கிறார்.

 

 

தான் வளர்ந்தது மட்டுமில்லாமல் காம்பியராக இருந்த சிவகார்த்திகேயனையும் முன்னணி ஹீரோவாக்கி அழகு பார்த்திருக்கிறார் தனுஷ். இப்போது இருக்கும் இளம் நடிகர்களிலேயே நடிக்கத் தெரிந்த நடிகர் என்றால் அது தனுஷ் மட்டும் தான். தனக்கு விருது வழங்கிய ஒரு விழாவில் விஜய் சொன்ன கமெண்ட் ‘தனுஷ் என்னை விட பெட்டர் ஆக்டர்' இவ்வளவு உயரத்துக்குப் போயும் கூட ரஜினியிடம் இருக்கும் அதே எளிமையைத்தான் கடைப்பிடிக்கிறார் தனுஷ். கமலுக்கு அடுத்து ஆஸ்கர் விருது அளவுக்கான தகுதி கொண்டவர் தனுஷ்தான் என்கிறார்கள் சினிமா விமர்சகர்கள். சூப்பர்ஸ்டார் மருமகன் என்ற டைட்டில் தனக்கு வேண்டாம் என்று போல்டாக சொல்லியவர் தனுஷ்தான்.

 

 

அடுத்தடுத்த தோல்விகளால் இனி தனுஷ் அவ்வளவுதான் என சொல்லியவர்கள் முன்பு, அதே ரஜினி ஃபார்முலாவை சரியாகப் பிடித்து வேலையில்லா பட்டதாரியை ப்ளாக்பஸ்டர் ஆக்கி காட்டினார் தனுஷ். தனுஷின் அசகாய நடிப்பு அவரை ஹாலிவுட் நோக்கி ஈர்த்திருக்கிறது. அங்கும் வெற்றிக்கொடி நாட்டுவார் என எதிர்பார்ப்போம். - க.ராஜீவ் காந்தி


    Related News...

பிக் பாஸ் வீட்டில் சிசிடிவி கேமராவை உடைத்து தற்கொலை மிரட்டல் விடுத்த நடிகர் வெளியேற்றம்
பித்தலாட்ட பிக்பாஸ்!- ஒரு டெக்னிகல் அலசல்
இந்த மனுஷன் டயர்டே ஆகமாட்டாரா... தூக்கமே வராதா? தனுஷை வியக்கும் பிரபலங்கள்! #HBDDhanush
விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம்!
நான் அப்படி செஞ்சிருக்கக் கூடாது: இப்ப ஃபீல் பண்ணும் தனுஷ்
இரண்டே இரண்டு கேள்வி கேட்ட போலீஸ்: கதறி அழுத காவ்யா மாதவன்
கமல் மீதான விமர்சனத்தை முதல்வர் தவிர்த்திருக்கலாம்.. சொல்றது யாருன்னு பாருங்க!
கடுந்தமிழ், புரியாத வாக்கியங்கள்... கலங்கடிக்கும் கமல் ட்வீட்கள்!
அஜீத்தை பார்த்து பொறாமைப்படும் விஜய்: அட, நெசமாத்தாங்க!
சொன்ன மாதிரியே திடீர்னு கையில் குழந்தையுடன் வந்து நின்ற 'அம்மா' சன்னி லியோன்