இந்த மனுஷன் டயர்டே ஆகமாட்டாரா... தூக்கமே வராதா? தனுஷை வியக்கும் பிரபலங்கள்! #HBDDhanush
28 Friday Jul 2017

திரைத்துறையில் தனுஷை ஒருவருக்குப் பிடிக்காது என்றால், அவர் பெரிய பொறாமைக்காரராக இருக்க வேண்டும். அந்த அளவுக்கு அனைவருக்கும் பிடித்தமான நடிகர். இயக்குநர்கள், சக நடிகர்கள் என அத்தனைப் பேரும் பாராட்டும் கலைஞர் தனுஷ். இன்று அவருக்குப் பிறந்த நாள். சக கலைஞர்கள் தனுஷைப் பற்றி என்ன சொல்கிறார்கள்?

 

ஒரு காலேஜ் பையனை மியூசிக் டைரக்டர் ஆக்கணும்னு நினைச்சது அவரோட பெருந்தன்மை. சின்னச் சின்னதா ஷார்ட் ஃபிலிம் பண்ணிட்டிருந்த என்கிட்ட அவர் சொன்னதும் வேணாம்னுட்டேன். ஆனா அவர்தான் என்மேல ரொம்ப நம்பிக்கை வெச்சு 21 வயசுல ஒரு படம் பண்ற சான்ஸ் கொடுத்தாரு. சினிமாவுக்கு நான் வர ஒரே காரணம் தனுஷ்தான்.

 

 

இதுவரைக்கும் அவரை ஒரு நிமிஷம் கூட ஃப்ரீயா நான் பார்த்தது இல்லை. ஒரு நடிகனுக்கு தூக்கம்கறது ரொம்ப முக்கியம். அதையே தியாகம் பண்றாரு. நானே கேட்பேன், டயர்டே ஆகமாட்டீங்களா?னு. அவ்வளவு கடின உழைப்பாளி. நான் ஸ்டாப் வொர்க்கர். ஸோ எனெர்ஜிஸ்டிக்.

 

அமிதாப்புக்கு பிறகு நான் பார்த்ததிலேயே பெஸ்ட் பெர்ஃபார்மர் தனுஷ்தான். ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்த நானே ஷூட்டிங்ல அவரோட டேலண்டை பார்த்து அசந்துட்டேன். நான் யோசிச்ச கேரக்ட்ரை நான் யோசிச்சதை விட பெட்டரா பண்றாரு

 

நாம ஒரு விஷயத்தை ஆகா.. இது ரொம்ப கஷ்டமாச்சேனு ஃபீல் பண்ணிட்டு இருப்போம். அதை அசால்ட்டா செஞ்சிட்டு செஞ்சதுக்கான அறிகுறியே இல்லாம போய்ட்டு இருப்பாரு. இட்ஸ் பாஸிபிள் ஒன்லி பை தனுஷ். அவர் பாலிவுட் மட்டும் இல்லை இன்னும் உயரத்துக்கு போகக் கூடியவர்.

 

ஒரு முன்னணி ஹீரோவே இன்னொரு ஹீரோவை வளர்த்துவிடறதுங்கறது தனுஷ் சாரால மட்டும்தான் சாத்தியம். 3, மெரீனாவுக்கு முன்னாடியே தனுஷ் சார் என்கிட்ட எனக்காக ஒரு படம் பண்ணுவீங்களான்னு கேட்டார். உடனே ஆமாம்னு சொல்லிட்டேன். அதுதான் என் வாழ்க்கைல திருப்புமுனை. அந்த நிமிஷத்துலருந்து படம் ரிலீஸ் ஆகுற வரைக்கும் அவர் எடுத்துகிட்ட அக்கறை ரொம்பப் பெரிசு. நிறைய பேர் மெரீனாவுக்கு அப்புறம் ஏன் 3 ல ஹீரோவுக்கு ஃப்ரெண்டா நடிக்கறேன்னு கேட்டாங்க. ஆனா நான் தனுஷ் சார் கூட நடிக்கறதை ஒரு பெருமையா நினைச்சேன். அன்னிக்கு அந்த வாய்ப்பை மிஸ் பண்ணிருந்தேன்னா இன்னிக்கு இப்படி ஒரு இடம் கிடைச்சிருக்குமாங்கறது சந்தேகம்தான்.

 

தனுஷ் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியதே புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கணும்னுதான். ஒவ்வொரு படத்துலயும் அட்லீஸ்ட் 3 புது டெக்னிஷியன்களுக்கு வாய்ப்பு கொடுக்கணும்னு குறிக்கோள் வெச்சிருக்காரு. என்கிட்டயே புது உதவி இயக்குநர்களுக்கு அதிகமா வாய்ப்பு கொடுங்கனு கேட்டுக்கிட்டாரு.

 

 

அவர் கூட வேலை பார்க்கும்போது ஒரு டைரக்டர் ஆர்ட்டிஸ்ட் ரிலேஷன்ஷிப் இருக்காது. ரொம்ப ஃப்ரெண்ட்லியா இருப்பாரு. நிறைய புத்தகம் படிச்சுட்டே இருப்பாரு. ஸ்கிரிப்ட்டோட ஒரு காப்பியை வாங்கி வெச்சுப்பாரு. அதே மாதிரி மறுநாள் என்ன எடுக்கப்போறோம்கறதை முதல் நாளே கேட்டு தெரிஞ்சிகிட்டு வரும்போதே ஷாட்டுக்கு ரெடியா வருவாரு. அந்த சின்சியாரிட்டியை யாருகிட்டயும் பார்க்க முடியாது. தனுஷ் சார் மானிட்டரே பார்க்க மாட்டாரு. ஒரே டேக் ஓகே வாங்குற அவர் எதுக்கு மானிட்டர் பார்க்கணும் சொல்லுங்க. தொகுப்பு: க.ராஜிவ் காந்தி

    Related News...

பிக் பாஸ் வீட்டில் சிசிடிவி கேமராவை உடைத்து தற்கொலை மிரட்டல் விடுத்த நடிகர் வெளியேற்றம்
பித்தலாட்ட பிக்பாஸ்!- ஒரு டெக்னிகல் அலசல்
தனுஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்.... இது ஒரு தனுஷ் காலம்! #HBDDhanush
விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம்!
நான் அப்படி செஞ்சிருக்கக் கூடாது: இப்ப ஃபீல் பண்ணும் தனுஷ்
இரண்டே இரண்டு கேள்வி கேட்ட போலீஸ்: கதறி அழுத காவ்யா மாதவன்
கமல் மீதான விமர்சனத்தை முதல்வர் தவிர்த்திருக்கலாம்.. சொல்றது யாருன்னு பாருங்க!
கடுந்தமிழ், புரியாத வாக்கியங்கள்... கலங்கடிக்கும் கமல் ட்வீட்கள்!
அஜீத்தை பார்த்து பொறாமைப்படும் விஜய்: அட, நெசமாத்தாங்க!
சொன்ன மாதிரியே திடீர்னு கையில் குழந்தையுடன் வந்து நின்ற 'அம்மா' சன்னி லியோன்