வாரிசு நடிகருடன் பாச நடிகை காதல்: கடுப்பில் இளம் ஹீரோ
28 Friday Jul 2017

சென்னை: பெயரில் அன்பை வைத்திருக்கும் நடிகை தற்போது வேறு ஒரு வாரிசு நடிகரை காதலிப்பதாக கூறப்படுகிறது.

பெயரில் அன்பை வைத்திருக்கும் நடிகையும், வெத்தலையை வாயில் வைத்துக் கொண்டு பேசுவது போன்று பேசும் நடிகரின் மகனும் காதலிப்பதாக மாதக் கணக்கில் பேசப்படுகிறது.

நடிகையிடம் கேட்டால் நழுவிவிடுகிறார். நடிகரிடம் கேட்டால் குடும்ப நண்பர் என்கிறார். இந்நிலையில் அவர்களின் நட்பில் பிரச்சனையாகி உள்ளதாம். அதற்கு காரணம் மற்றொரு வாரிசு நடிகராம். தந்தையை இழந்த அந்த வாரிசு நடிகர் தான் நடிகையுடன் தற்போது கிசுகிசுகப்படுகிறார். இதை அறிந்து தான் குடும்ப நண்பர் நடிகர் கடுப்பில் உள்ளாராம். நடிகை இது எதையுமே கண்டுகொள்வதாக இல்லை.

    Related News...