ரஜினிகாந்த் முதல்வரானால் மிகவும் சந்தோஷம்தான்! - தனுஷ்
26 Wednesday Jul 2017

ஹைதராபாத்: ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக உள்ளது என்று அவரது மருமகன் தனுஷ் தெரிவித்துள்ளார். ஹைதராபாதில் விஐபி 2 படத்தின் செய்தியாளர் சந்திப்பில் தனுஷ் அளித்த பேட்டி:

 

கேள்வி: உங்களை இன்னொரு தம்பதி தங்கள் மகன் என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்களே? அதுபற்றி என்ன சொல்கிறீர்கள்? பதில்: ஒருவரை தங்கள் மகன் என்று சொல்வதும் நாங்கள்தான் அம்மா, அப்பா என்று ஆதாரங்கள் காட்டுவதும் இப்போதெல்லாம் சுலபமானது. போட்டோக்களை மாற்றுவதும் எளிதாகிவிட்டது. அதனால்தான் என்னுடைய பெற்றோர்கள் என்று அந்த தம்பதியினர் புகைப்படத்தை காட்டியபோது நானும், என் மனைவியும் குடும்ப உறுப்பினர்களும் சிரித்துக்கொண்டோம்.

 

கேள்வி: பிரபலமாக இருப்பதால் இதுபோன்ற சிரமங்கள் வருகிறது என்று கருதுகிறீர்களா? பதில்: ஆமாம். பிரபலமாக இருப்பதால்தான் இதுபோன்ற ஆபத்துகளும் சூழ்கிறது. ஆனால் இந்த பிரபலம் என்ற அந்தஸ்து எல்லோருக்கும் அமையாது. அதற்கு அதிர்ஷ்டம் இருக்க வேண்டும். ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான ரசிகர்களை சம்பாதிப்பது சாதாரண வி‌ஷயம் இல்லை. அதனால் பிரபலமாக இருப்பதில் எனக்கு சந்தோ‌ஷம்தான். சினிமா தவிர வேறு உலகம் எனக்கு தெரியாது. கடவுள் அருளால்தான் இந்த அளவுக்கு உயரத்தில் இருக்கிறேன்.

 

கேள்வி: நடிகர் விஷால் நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் இரண்டிலும் பொறுப்பில் இருக்கிறாரே? அது சரியா? பதில்: நான் மற்றவர்கள் விவகாரங்களில் தலையிட மாட்டேன். நான் நடித்த படங்கள், குடும்பம் தவிர வேறு எதை பற்றியும் சிந்திப்பது இல்லை. உண்மையில் எனக்கு பொது அறிவும் குறைவு. 

 

கேள்வி: ரஜினிகாந்துடன் இணைந்து நடிப்பீர்களா? பதில்: ரஜினி சாருடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பு வந்தால் சந்தோ‌ஷப்படுவேன்.

 

கேள்வி: ரஜினிகாந்தை சார் என்கிறீர்களே? மாமா என்று அழைக்க மாட்டீர்களா? பதில்: சில உறவுகளை வீட்டோடு வைத்துக்கொள்ள வேண்டும். ரஜினி சார் மக்களுடையை மனிதர். அவரைப்பற்றி பொது இடத்தில் பேசும்போது சார் என்றால்தான் கவுரவமாக இருக்கும். 

 

கேள்வி: மக்கள் மனிதரான ரஜினிகாந்தை முதல்வராக பார்க்க ஆசை இல்லையா? பதில்: எனக்கு அரசியல் தெரியாது. ரஜினி சாருக்கு என்ன தோன்றுகிறதோ அதை அவர் செய்வார். ஒருவேளை அவர் அரசியலுக்கு வந்து முதல்வரானால் மிகவும் சந்தோ‌ஷம்தான். ரஜினி சார் அரசியலுக்கு வரவேண்டும் என்றுதான் அவரது ரசிகர்களும் விரும்புகிறார்கள். 

 

 

    Related News...

.‘இனிமேல் கவனமாக இருப்பேன்’ - சிவகார்த்திகேயன் நேர்காணல்
சுசீலீக்ஸ் பற்றி கேட்டதும் கடுப்பாகி பேட்டியில் இருந்து பாதியில் கிளம்பிச் சென்ற தனுஷ்
கமல் 'அந்த' நடிகையின் பெயரை சொன்னது சட்டப்படி தப்பு: கவுதமி
'சிஸ்டம் சரியில்லை'... முதலில் சொன்னவர் ரஜினியா, கமலா? இதோ எவிடென்ஸ்!
பரஞ்சோதி’ டூ ‘பரமன்’... சௌந்தரராஜா ரொம்ப ஹேப்பி!
அக்னி நட்சத்திரம் ரீமேக்கில் நடிக்கும் ஆசை இல்லை! - கௌதம் கார்த்திக்
வல்லரசாவது இருக்கட்டும்.. முதலில் விவசாயிகள் பிரச்சினையைப் பாருங்க! - அரசுக்கு விஜய் குட்டு
ஜிஎஸ்டி விவகாரம்... கமலின் கலகக் குரல் எடுபடுமா... அல்லது கோடம்பாக்க ரெய்டுக்கு துணை போகுமா?
அப்துல் ரகுமான் மறைவு தமிழ் இலக்கியத்துக்கு பேரிழப்பு! - ரஜினிகாந்த்
ரஜினி பாஜகவில் சேர்ந்து அடங்குவதை விட தனிக்கட்சி துவங்குவது நல்லது: கங்கை அமரன்- எக்ஸ்க்ளூசிவ்