பப்ளியை வைத்து ஃபோட்டோசெஷன்... கலக்கத்தில் ஹீரோக்கள்!
28 Friday Jul 2017

பிரம்மாண்ட சரித்திர படம் ட்ராப் என்றுதான் செய்திகள் வருகின்றன. ஹீரோக்களாக பிக்கப் நடிகரும் வெற்றி நாயகனும் கமிட் ஆகிவிட்டார்கள். ஆனால் ஹீரோயின் கிடைக்காமல் தான் திண்டாடுகிறார்களாம். உலக வாரிசு விலகிய நிலையில் இயக்குநரின் மனம் கவர்ந்த பப்ளி நடிகையை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாக வதந்தி பரவியது. அவர் இவ்வளவு வெயிட்டான இளவரசி கேரக்டருக்கா? செட் ஆகாதே... என்று இண்டஸ்ட்ரியே சந்தேகப்படுகிறது. ஹீரோக்களும் அந்த நடிகை என்றால் விலகி விடலாம் என்ற முடிவுக்கே வந்துவிட்டனராம். இதைப் பற்றியெல்லாம் கவலையே படாமல் இயக்குநர் அந்த ஹீரோயினை வைத்து ஃபோட்டோசெஷன் எடுத்து விட்டாராம். இது தெரிந்து சம்பந்தப்பட்ட இரண்டு ஹீரோக்களும் கலக்கத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Related News...