கமலின் அடுத்த படம் 'தலைவன் இருக்கிறான்': ட்வீட்டுகளுக்கும், இதற்கும்...#ThalaivanIrukkiran
28 Friday Jul 2017

சென்னை: விஸ்வரூபம் 2, சபாஷ் நாயுடு படங்களை அடுத்து கமல் ஹாஸன் தலைவன் இருக்கிறான் படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். உலக நாயகன் கமல் ஹாஸன் சபாஷ் நாயுடு படத்தை துவங்கி பாதியில் நிற்கிறது. விஸ்வரூபம் 2 படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இந்த படமும் பிரச்சனையை சந்திக்குமோ என்று ரசிகர்கள் அஞ்சுகிறார்கள். சபாஷ் நாயுடுவை முடித்த கையோடு தலைவன் இருக்கிறான் படத்தில் நடிக்கிறார் கமல் ஹாஸன்.

 

கமல் ஹாஸன் எழுதி, இயக்கி நடிக்கும் தலைவன் இருக்கிறான் படம் இந்தியில் அமர் ஹைன் என்ற பெயரில் எடுக்கப்படுகிறது. அரசியல், நிதி மற்றும் நிழல் உலகம் பற்றிய த்ரில்லர் படமாம்.

 

கமல் ஹாஸன் ட்விட்டர் மூலம் தமிழக அரசை கேள்வி மேல் கேள்வி கேட்டு வரும் நிலையில் தலைவன் இருக்கிறான் அறிவிப்பு வந்துள்ளது அவரின் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

 

தற்போது ட்வீட்டி வருவதற்கும், படத்திற்கும் தொடர்பு இல்லை. 4 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு செய்யப்பட்ட தலைப்பு தான் தலைவன் இருக்கிறான் என்று கமல் தெரிவித்துள்ளார்.

 

தலைவன் இருக்கிறான் பற்றி ஆளாளுக்கு ட்வீட்டி வருவதால் #ThalaivanIrukkiran என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

    More Latest Events..

கார்த்தி படத்திற்கு முதன் முறையாக இசையமைக்கும் முன்னணி இசையமைப்பாளர்
விஜய் போஸ்ட்டரை கிழித்து ரகளை செய்த அமைப்பினர்
வைரமுத்து குறித்த வழக்கில் அதிரடி தீர்ப்பு
கமலை அடுத்து ரஜினி டைட்டிலில் சிபிராஜ்
கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாம்
25 வருடத்தில் முத்திரை பதித்த முக்கிய நாள்! விஜய் ஸ்பெஷல் - ரசிகர்கள் கொண்டாட்டம்
பூஜையுடன் தொடங்கிய ஹிப்ஹாப் ஆதியின் அடுத்த படம்
ஜனவரி 26ம் தேதி வெளியாகும் ‘இரும்புத்திரை’!
சூர்யா ரசிகர்களுக்கு இன்று சிறப்பு விருந்தளிக்கும் படக்குழு
ராதாரவியை நீக்கிய வழக்கு: விஷால் நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு