25 வருடத்தில் முத்திரை பதித்த முக்கிய நாள்! விஜய் ஸ்பெஷல் - ரசிகர்கள் கொண்டாட்டம்
19 Tuesday Dec 2017

விஜய் படங்களில் காதல் காட்சிகள் முக்கியமானதாக இருக்கும். இதை அவரது ரசிகர்கள் நன்கு அறிவார்கள். அவரின் முந்தய படங்களை அதிகம் பார்த்தவர்களுக்கும் தெரிந்திருக்கும்.

இதில் காதலுக்கு மரியாதை படமும் ஒன்று. 1997 இதே டிசம்பர் 19 ல் மலையாள இயக்குனர் ஃபாசில் இயக்கத்தில் படம் வெளியானது. விஜய், ஷாலினி இருவரும் இப்படத்தில் ஜோடி சேர்ந்தார்கள்.

இப்படம் இன்று 20 ம் வருட கொண்டாட்டத்தை எட்டியுள்ளது. மலையாளத்தில் குஞ்சகோ பாபன், ஷாலினி நடிப்பில் வெளியான Aniathipravu என்ற மலையாள படத்தின் ரீமேக் தான் இப்படம்.

இது அந்நேரத்தில் கிளாகிக் என விமர்சனங்கள் கொடுக்கப்பட்டதால் பிளாக் பஸ்டர் லிஸ்டில் இடம் பெற்றது. என்னை தாலாட்ட வருவாளா பாடலில் விஜய்யின் நடனம் இன்னும் மறக்க முடியாதது.

ஷாலினி ஹீரோயினாக தமிழுக்கு வந்த முதல் படம் என்பதோடு, விஜய்க்கு சிறந்த நடிகருக்கான தமிழக அரசு விருது கிடைத்தது. இது அவருக்கு கிடைத்த முதல் விருது என்பது முக்கியமானது.

இளையராஜா இசையமைப்பில் பாடலை எழுதிய பழனி பாரதிக்கும் விருது வழங்கப்பட்டது. மேலும் தமிழில் இருந்து அப்படியே ஹிந்தியில் அக்‌ஷய் கண்ணா, ஜோதிகா நடிக்க டோலி சஜே கி ராக்னா என ரீமேக் செய்யப்பட்டது.

    More Latest Events..

கார்த்தி படத்திற்கு முதன் முறையாக இசையமைக்கும் முன்னணி இசையமைப்பாளர்
விஜய் போஸ்ட்டரை கிழித்து ரகளை செய்த அமைப்பினர்
வைரமுத்து குறித்த வழக்கில் அதிரடி தீர்ப்பு
கமலை அடுத்து ரஜினி டைட்டிலில் சிபிராஜ்
கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாம்
பூஜையுடன் தொடங்கிய ஹிப்ஹாப் ஆதியின் அடுத்த படம்
ஜனவரி 26ம் தேதி வெளியாகும் ‘இரும்புத்திரை’!
சூர்யா ரசிகர்களுக்கு இன்று சிறப்பு விருந்தளிக்கும் படக்குழு
ராதாரவியை நீக்கிய வழக்கு: விஷால் நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு
கமலின் அடுத்த படம் 'தலைவன் இருக்கிறான்': ட்வீட்டுகளுக்கும், இதற்கும்...#ThalaivanIrukkiran